திட்டக்குடியில் தமுமுக, மமக கட்சி கொடியேற்று விழா


 

கடலூர் வடக்கு மாவட்டம் திட்டக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கி 25 வது ஆண்டு முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு தமுமுக  மாவட்ட துணை செயலாளர் திட்டக்குடி ஷாகுல் அமீது தலைமை தாங்கினார். நகர செயலாளர் கரிம் பேக், நகர பொருளாளர் சுபேதார் பாஷா முன்னிலை வகித்தனர்.

 


 

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் வி.எம் சேக் தாவூத் தமுமுக  கொடியையும் மாவட்ட உலமா அணி பொருளாளர் நஜிருல்லாஹ் மிஸ்பாஹி மமக கொடியையும்  ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஆட்டோ அமானுல்லா கிளை தலைவர் அன்சாரி முஹம்மது நகர துணை செயலாளர் சிறுமூளை தாஜூதீன் முகமது அலி ஜின்னா அர்சத் ராஷித் நகர ஊடகப்பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

முடிவில் தமுமுக நகர செயலாளர் ஹம்சா முகமது நன்றி தெரிவித்தார்.