ஸ்ரீபெரும்புதூரில்  பாஜக சார்பில்  சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களின்  249 ஆவது நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாஜக சார்பில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் இன் 249 ஆவது நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் ஒண்டிவீரன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஒண்டிவீரன் வெள்ளையர்களை எதிர்த்து போராடியதை நினைவு கூர்ந்தனர்.

 

இந்நிகழ்ச்சிக்கு பாஜக கட்சியின் மாநிலSC அணி பொருளாளர் தொழிலதிபர் PPGD.சங்கர் தலைமையேற்று  ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

பாஜக காஞ்சி மாவட்ட துணைத்தலைவர் ஓம்சக்தி M.செல்வமணி , காஞ்சி மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் TT.பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

 

மேலும் சமூக ஊடக மாவட்ட பொறுப்பாளர் R.கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய துணைத்தலைவர் A.G.மணிமாறன், நகர SCஅணித்தலைவர் P.ஜெயக்குமார் மற்றும் பாஜகவினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினர்.