புளியரை  தெற்குமேடு பகுதியில் திமுக வர்த்தக அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் 


 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியம் புளியரை - தெற்குமேடு பகுதிகளில் திமுக தலைவர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மாநில வர்த்தக அணியின் துணைத் தலைவர் டாக்டர் ச‌. அய்யாத்துரை பாண்டியன் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான தலைவர் கலைஞரின் 2-ஆம் ஆண்டு  நினைவு நாளை  முன்னிட்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் என்ற கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க 

இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின்படி திமுக மாநில வர்த்தகர் அணி சார்பாக செங்கோட்டை ஒன்றியம் புளியரை -  தெற்குமேடு  ஊராட்சிக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரிசி பருப்பு அடங்கிய தொகுப்பு மூலம் நலத்திட்டங்களை திமுக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர், டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தலைவர் டாக்டர் ச.அய்யாத்துரைப்பாண்டியன் சார்பாக செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ரவிசங்கர் தலைமையில் புளியரை ஊராட்சி செயலாளர் பிச்சையா,தெற்குமேடு ஊராட்சி செயலாளர் சிவசங்கர் அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக  இளைஞரணி துனை அமைப்பாளர் ஹக்கீம், ஒன்றிய இளைஞரணி துனை அமைப்பாளர்கள் சுப்புராஜ், சந்தோஷ், அச்சன்புதூர்  இசக்கிதுரை  ,

ஒன்றிய பிரதிநிதி விஸ்வநாதபுரம் பேச்சிமுத்து, மாயாண்டி, மூக்கையா, முருகன், அய்யாதுரை,மயில், மகாராஜாபாண்டியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.