திருச்செந்தூர் பரமன்குறிச்சி வங்கியில் ரூ 6.5லட்சம் கடன் உதவி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்

                                                                                                                                                  பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் சிறுதொழில் தொடங்குபவர்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாலசிங் தலைமை வகித்தார். செயலர் முத்துவேல் வரவேற்றார். துணைத்தலைவர் பூங்குமார், வங்கியின் இயக்குநர்கள் ராஜேந்திரகுமார், மந்திரமூர்த்தி, கோபால்கண்ணன், ராஜகோபால், தேவமாதா, ஆனந்த்பாய், சுலோச்சனா, மாயாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

சிறப்பு விருந்தினராக அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளை மகளிர் சுயஊதவிக்குழு, சிறுதொழில் தொடங்குபவர்களுக்கு ரூ6.50லட்சம் கடன் உதவிகளை வழங்கினார். 

 

இதில் பரமன்குறிச்சி ஊராட்சி செயலர் இளங்கோ, உடன்குடி நகர செயலர் ஜாண்பாஸ்கர், மாவட்ட அமைப்பாளர்கள் வர்த்தகஅணி ரவிராஜா, நெசவாளர் அணி மகாவிஷ்ணு, குலசேகரன்பட்டினம் ஊராட்சி செயலர் அலாவுதீன், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், வங்கி கணக்காளர் ஞானராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.