திருப்பூர் மாநகராட்சி  துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை

5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை  மாநகராட்சி  துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி நல்லூர் மண்டலம் சார்பில் மாவட்டத்தலைவர் செந்தில்வேல் தலைமையில் மண்டலத்தலைவர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நேற்று காலை 10:30 மணியளவில் காங்கேயம் ரோடு, வி.ஜி.வி.கார்டன் அருகே மாநகராட்சி  துப்புரவுபணியாளர்களுக்கு மரியாதை செலுத்தி 25 பேருக்கு கொரோனா பாதுகாப்பு சீருடை வழங்கியும், பிரதமர் மந்திரி திட்டமான ஆயுஸிம்மன் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 25 பேருக்கு தலா 5 லட்சம் மருத்துவக்காப்பீட்டுத்திடம், மற்றும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, முகக்கவசம் வழங்கப்பட்டது.அதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, மாவட்ட செயலாளர் ஒர்க்சாப் கார்த்தி, மண்டல பொதுச்செயலாளர்கள் குமார், சதீஷ் மற்றும் தமிழ் வளர்ச்சி வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் சதாசிவம், செந்தில் உள்ளிட்ட கட்சி மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.