தொலைபேசி மூலம் குறை கேட்கிறார் திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்

தொலைபேசி மூலம் நேரடியாக மனுவை பெறும் முறையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.



திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மனுக்களை கொடுக்க  மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள்  வருவதை தவிர்க்கும் பொருட்டு தொலைபேசி வாயிலாக மனுவை கொடுக்கும் முறையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அறிமுகம் செய்து 0421-2969999 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்தார். அதன்படி இன்று முதல் தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் குறைகள் கேட்டறியும் முறையை ஆட்சியர் துவக்கி வைத்தார். 11 மணிக்கு துவங்கிய குறை கேட்கும் முகாமில்   மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பொதுமக்கள் தொலைபேசி மூலம் தெரிவித்த மனுக்களை அதிகாரிகள் மூலம் குறித்துக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Previous Post Next Post