நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட சந்தன நகர் குளத்தினை 7லட்சம் மதிப்பீட்டில்  புனரமைக்கும் பணிக்கு பூமி பூஜைஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட சந்தன நகர் குளத்தினை 7லட்சம் மதிப்பீட்டில்  புனரமைக்கும் பணிக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

 

பின்னர் நம்பியூர் வட்டாரத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணி மேற்கொண்ட பணியாளர்கள் 203நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக நம்பியூரில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுக வில் அமைச்சர் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.

 


 

அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, நம்பியூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு செய்து முடித்துள்ளது எனவும், 425நபர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகளும்,எலத்தூர் பேரூராட்சியில் 617நபர்களுக்கு வீடுகளும் கட்டி முடிக்க பட்டுள்ளது எனவும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சந்தன நகர் குளம் புனரமைப்புக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

 

மேலும் பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்க பட்டுள்ளது எனவும், பதினொன்றாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு மறு தேர்வு எழுத வாய்ப்பு எனவும், பாடத்திட்டங்கள் குறைப்புக்கு சூழ்நிலைகேற்ப முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.

 

பள்ளிகளில் மாற்று சான்றிதழ் வழங்க பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.இதில் ஆவின் தலைவர் காளியப்பன்,வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு,ஒன்றிய செயலாளர் தம்பி(எ)சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா ஈஸ்வரமூர்த்தி,யூனியன் சேர்மன் சுப்பிரமணியம்,பேரூர் கழக செயலாளர்கள் கருப்பண்ண கவுண்டர்,சேரன் சரவணன் அருண் மஹால் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 
 

Attachments area