கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கு சிறைத்துறை ஏற்பாடு


கொரோனா பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் குடும்பத்தினரை சந்திக்க கைதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்க வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கு சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.


இதற்காக ஒவ்வொரு மத்திய சிறையிலும் 10 செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது. அதன்படி நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் கைதிகள் தினமும் 7 நிமிடங்கள் உறவினர்களுடன் பேசி வருகின்றனர்.


து குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை வீடியோ கால்களில் பேசியுள்ளனர்’ என்றனர்.