திருப்பூர் டிரீம் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், விரிக்ஷா பள்ளியில் இரத்ததான முகாம்


திருப்பூர் டிரீம் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், விரிக்ஷா பள்ளியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. ஐ.எம்.ஏ., ரோட்டரி இரத்த வங்கிக்கு வழங்கும் வகையில் நடந்த இந்த இரத்த தான முகாமில் 100 க்கும் மேற்ப்பட்ட கொடையாளர்கள் இரத்ததானம் செய்தனர்.


முன்னாள் ரோட்டரி கவர்னர் கார்த்திகேயன் முகாமினை துவக்கி வைத்தார். ஐ.எம்.ஏ., இரத்த வங்கி இனை செயலாளர் கணேசமூர்த்தி, ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி தலைவர் பிரேம் ஆனந்த்,  டிரீம் சிட்டி ரோட்டரி தலைவர் ராஜா, செயலாளர் பஞ்சாபகேசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பொருளாளர் சாமிநாதன், விரிக்‌ஷா  பள்ளி நிர்வாகிகள் கோவிந்தராஜன், ராஜலட்சுமி, ஜோதிமணி, பாரதி, காமராஜ், தனசேகர், மைதிலி, ராணி, சீனிவாசன், கவிதா லட்சுமி, சண்முக பிரியா,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.