பழனியில் ஒலி ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வட்டாட்சியரிடம் மனு

பழனியில் ஒலி ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 


 

பழனி வட்டாச்சியர் வளாகத்தில்  தமிழ்நாடு டெக்ரேட்டர்ஸ் நலசங்கம் மற்றும்  தமிழக ஒலி & ஒளி அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பாக கடந்த ஆறு மாதங்களாக கொரோனா தொற்றின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழக அரசு அனைத்து தொழில்களுக்கு 50% சதவீதம் தளர்வு அறிவிக்கப்பட்டு அனைத்து தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் சார்ந்த தொழில்கள் மற்றும் ஒலி &ஒளி,பந்தல் டெக்கரேசன் வாடகை பாத்திரக்கடை தொழிலாளர்களின் நிலையை கவனத்தில் கருதி திருமணம் மற்றும் சுப காரியங்களில் 50% சதவீத மக்கள் அரசு  விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழாக்கள் திருமணம் சார்ந்த தொழில்களை நடத்தவும் மற்றும் தொழில் சார்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல வாகன அனுமதி வழங்க வேண்டும் கொரோனா தொற்று காலத்தினால் தொழில் பாதிக்கப்பட்டு முறையான வருமானம் இல்லாமல் குடும்பத்தில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா  சிறப்பு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வட்டாட்சியர் பழனிச்சாமியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் சங்கத் தலைவர் அலாவுதீன் முன்னிலையாக முத்துக்குமார் மற்றும் சங்க உறுப்பினர்களான குருசாமி,இஸ்மாயில், கண்ணன், பாலகணேசன், முருகன், கோடீஸ்வரன், உள்ளிட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு கோரிக்கை மனுவினை வட்டாட்சியரிடம் வழங்கினர்..