தேனியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு


தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து தென்னிந்தியா பார்வர்ட் பிளாக் பெரியகுளம் நகர செயலாளர் துரை என்பவர் ரேஷன் கடைகளில் ஊழியர்களை கண்டித்துள்ளார்.

 

இதை ரேஷன் கடை ஊழியர்கள் பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் துரை எங்களை மிரட்டுகிறார் என்று புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

 

சம்பந்தப்பட்ட வரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்யாமல் ஒருதலைப் பட்சமாக எனது கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து. இன்று தேனி மாவட்ட தென்னிந்திய பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் எம்.பி.எஸ்.முருகன். மற்றும் பெரியகுளம் நகர ஒன்றிய செயலாளர் துரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

பின்னர் இது சம்பந்தமாக விசாரணை செய்யாமல் பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும். மற்றும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்க மறுத்தால் நாளை மறுநாள் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று தேனி மாவட்ட பொதுச் செயலாளர் தெரிவித்தனர்.