நீட் தேர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் - கனிமொழி எம்.பி


 

நாட்டில் கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக 34 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையில் சொல்லக்கூடிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

 

பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்த கனிமொழி எம்.பி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்

 

"தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்வதற்காக திமுக ஒரு குழு அமைத்து பல்வேறு கருத்துக்களை கூறியது அந்த கருத்துக்கள் எதுவும் இதுவரை ஏற்கபடவில்லை, 

 

பல்வேறு மாநிலங்கள் இந்த கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கூறிய கருத்துக்கள் எதுவும் ஏற்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். 

 

சமூகநீதிக்கு எதிரானதாகவும், மொழி திணிப்பிற்ககாகவும், மாநிலங்களிடையே உரிமையை பறிக்கும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை அமைந்துள்ளது எனவும்

 

இந்த கொரானா தொற்று பரவிவரும் இந்த சூழலில் நீட் தேர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் பின்னர் அது நிரந்தரமாக விலக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

 

தமிழகத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு எதிர்க் கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. 

 

இந்த காலத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களை பட்டியளிடவே முடியாது என்ற அவர், 2021 ஆம் ஆண்டு தேர்தளுக்கான பிரச்சாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களே தவிர மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை என்று  கூறினார்.

 

பேட்டியின் போது மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உட்பட  திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Previous Post Next Post