குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் விழா... துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் விழாவை துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

 


 

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச முககவசம் மற்றும்  தேனி மாவட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கு  நிதி உதவியை தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்  தொடங்கி வைத்தார்.

 

இதன் மூலம் தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக  228 நியாய விலைக் கடைகளில் 2,13263 குடும்ப அட்டைகளை சார்ந்த 6,40832 குடும்ப உறுப்பினர்களுக்கான 12,82000 விலை இல்லா முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளது.

 

தேனி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் பின்தங்கிய நிலையிலுள்ள உள்ள 400 முஸ்லிம் மக்களை தேர்வு செய்து சிறு குறு தொழில் செய்ய தல 7500 வீதம் 30,00000 (முப்பது லட்சம்) நிதி உதவி நேரில் வரவழைத்து வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட  ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரன் தேஜ்ஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் ,மற்றும்மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் நிறைமதி, கலந்து கொண்டனர்.