ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை நகர வங்கி தலைவர் அரங்க. நீதிமன்னன் திறந்துவைத்தார்.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியர் பயின்றிட வசதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட  செயலாளருமான  அருண்மொழிதேவன்  தனது தொகுதி வளர்ச்சியில் இருந்து 14 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி அடிக்கல் நாட்டி தூக்கி வைத்திருந்தார் 

 

இதனை அடுத்து தற்போது  கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து  திட்டக்குடி முன்னாள் பேரூராட்சி தலைவரும் நகர வங்கி தலைவருமான அரங்க. நீதிமன்னன்  இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளியின் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்

 

 நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா கூட்டுறவு வங்கி தலைவர் முல்லை நாதன் நகர பொருளாளர் நாகராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ராஜவேல் கல்யாணசுந்தரம் ராமர் கொளஞ்சி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.