போடியில் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்





 

போடி  திருவள்ளுவர் சிலை அருகே கொரோனா ஊரடங்கு காலங்களில் புதிய தேசிய கல்வி கொள்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருத்த சட்டம் மற்றும் கிரிமினல் தண்டனை சட்டங்களில் திருத்தங்கள் போன்ற பொதுமக்களுக்கு எதிரான சட்டதிட்டங்களை கொரோனா ஊரடங்கு காலங்களில் யாரும் கேள்வி கேட்க இயலாத சூழ்நிலையில் சூசகமாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்து மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திருத்தம் வரைவு EIA , குற்றவியல் சட்டங்கள் அவசரகதியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கல் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை பிரச்சார இயக்கத்தை SDPI கட்சி நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக போடிநாயக்கனூரில் திருவள்ளுவர் சிலை முன்பாக SDPI கட்சியின் போடி தலைவர் லத்திப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட SDPI கட்சியின் தலைவர் அபுபக்கர் சித்திக் கூறுகையில்  கொரோனா ஊரடங்கு காலங்களில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு யாரும் கேள்வி கேட்க இயலாத வகையிலும் அவசரகதியில் பல சட்ட திருத்தங்களை இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலும் சூசகமாக நிறைவேற்றி வருவதாக கூறினார். இதனை கண்டிக்கும் வகையில் தற்போது SDPI கட்சியினர் போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.