திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்


 

நெல்லை மேலப்பாளையம் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்  சண்முககுமார் ஏற்பாட்டின் பேரில் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முதல் ஓட்டுரிமை பெற்றுள்ள இளைஞர்கள் 50 பேர் அதிமுக திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

 

இந்நிகழ்ச்சியின்போது பாளையங்கோட்டை ஒன்றியக் கழக செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பள்ளமடை பாலமுருகன், தச்சநல்லூர் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாலசுப்ரமணி, நெல்லை பகுதி 42வது வட்டக் கழக செயலாளர் காந்தி வெங்கடாசலம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டர் அணி  துணை தலைவர் பாலமுருகன்,முத்துப்பாண்டி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.