திருப்பூரில் ஆதரவற்ற முதியவர்களுக்கு சிக்கன் பிரியாணி... இந்திராசுந்தரம் வழங்கினார்

திருப்பூரில் ஆதரவற்ற முதியவர்களுக்கு இந்தராசுந்தரம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் சிக்கன் பிரியாணியை நிறுவனர் இந்திராசுந்தரம் வழங்கினார். 



இந்திராசுந்தரம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் தொடர்ந்து பல உதவிகள் செய்து வருகிறார்கள். இன்று பிரியாணி ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. 



இதைப்பற்றி அவர் பேசுகையில்- 


திருப்பூரில் ஆங்காங்கே ஆதரவற்றவர்கள் ரோட்டின் ஓரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சமூக சேவகர்கள், அறக்கட்டளைகள் சார்பில் உணவுகள் கொடுக்கப்படுகிறது.



இவர்கள் பெரும்பாலும் மெயின் ரோடுகள் பகுதியில் வசிப்பதால் சுலபமாக உணவுகள் கிடைக்கிறது. மிகவும் வயதானவர்கள், சந்து ரோடுகளில் வசிப்பவர்களுக்கு பெரும்பாலும் உணவுகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு சுவையான உணவு வழங்க வேண்டும் என்று நினைத்தேன்.



இன்று சுமார் 70 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து தனித்தனியாக பார்சல் செய்து வாங்கினேன். அதனுடன் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் சேர்த்து ஒவ்வொரு தெருவாக சென்று மிகவும் முடியாமல் இருக்கும் நபர்களை தேடி கொடுத்தேன். அவர்கள் சந்தோசத்துடன் பெற்றுக்கொண்டார்.



சிலர் அதை வாங்கி உடனே பிரித்து ஆர்வமுடன் சாப்பிட்டதை பார்க்கும் பொழுது மனம் நிறைவாக உள்ளது இயலாதவர்களை தேடி சென்று கொடுக்க இணைந்த கரங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் எனக்கு உதவினார்கள் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்தார். 


Previous Post Next Post