நெல்லை சந்திப்பில் மூப்பனார் பிறந்த நாள் விழாதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பில் மூப்பனார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த மூப்பனார் உருவ படத்திற்கு மாவட்டத் தலைவர் சுத்தமல்லி முருகேசன் மாலை அணிவித்தார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சியில்  மாநில செயலாளர்கள் ஏபி சரவணன், சிந்தா சுப்ரமணியன், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் ஜெகநாத ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் கிருஷ்ணகுமார், தொண்டரணி மாவட்டத் தலைவர் சண்முகம்,  மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், ஜேபி பாஞ்சாலம், மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், தச்சை மண்டலம் அருள், வர்த்தக அணி சக்சஸ் புன்னகை, மானூர் வட்டார தலைவர் சுத்தமல்லி பிச்சுமணி, இளைஞர் அணி ஸ்ப்ளெண்டர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.