நீலகிரி மாவட்டம் உதகை என்.சி.எம்.எஸ். தலைவராக மீண்டும் பணியை துவங்கி உள்ள  கே.ஆர்.ஆல்துரை


நீலகிரி மாவட்டம் உதகை என்.சி.எம்.எஸ். தலைவராக மீண்டும் தனது பணியை துவங்கி உள்ள  கே.ஆர்.ஆல்துரை, அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினாேத் மற்றும் கழக அமைப்புச் செயலாளரும்,

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜுணன் முன்னிலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார் கே.ஆர்.ஆல்துரை. 

 

இந்நிகழ்வில் உதகை நகரக் கழகச் செயலாளர் சண்முகம், உதகை ஒன்றியச் செயலாளர் டி.பெள்ளி ஆவின் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் உதகை ஒன்றிய செயலாளர் கடநாடு பா.குமார், முன்னாள் உதகை நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன்,

அரசு வழக்கறிஞர் மற்றும் கழக பாெதுக்குழு உறுப்பினர் தேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சிவலிங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் மரகல் சிவகுமார், சூப்பர் மார்க்கெட் துணைத் தலைவர் ஷாந்த் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.