தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக ஆர்ப்பாட்டம்


தமிழகம் முழுவதும் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கடந்த குடியரசு தினவிழாவில் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தலித் தலைவர்கள் கொடியேற்றம் விடாமல் தடுக்கப்பட்டு உள்ளனர் இந்த சாதிய தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.


இன்று தேனி மாவட்டத்தில் எட்டு இடங்களில் கடுமையான கோஷங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கிறது. தேனியில் ஒன்றிய அலுவலக வாசலில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் E.தர்மர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர், ஆண்டிபட்டியில் தோழர் வி சின்னன் தலைமையிலும் பெரியகுளம் ஒன்றியத்தில் இளங்கோவன் தலைமையிலும் உத்தமபாளையம் ஒன்றியத்தில் சி. வேலவன் தலைமையிலும் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் போஸ் தலைமையிலும் கம்பம் ஒன்றியத்தில் வி மோகன் தலைமையிலும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது