புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியத்தில் கொராணா தடுப்பு முன்னெச்செரிக்கை கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் கொராணா தடுப்பு முன்னெச்செரிக்கை கூட்டம் தமிழக அரசின்வழி காட்டதலோடு ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து தலைமையில் நடைபெற்றது.


வட்டார வளர்ச்சி அலுவலர் வ..ஊ அமுதவள்ளி முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார வர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ஆயிஷாராணி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் 32 ஊராட்சி மன்றத்தலைவர்கள், மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் கொராணா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளாக குப்பைகள் அகற்றுவது, கிரிமி நாசினி தெளிப்பது, கபசரக் குடிநீர் வழங்குவது, முகக் கவசம் அணியாமல் வெளியில் பொதுமக்கள் வராமல் தடுப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது மற்றும் கொராணா வராமல் மக்களை காக்கும் அனைத்து வழிகளையும் கடைபிடிப்பது எவ்வாறு கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் திட்ட மேலாளர் பாண்டியன் நன்றியுரை ஆற்றினார்.