பாளையங்கோட்டையில் நகர தொழில் வர்த்தக சங்க கலந்தாய்வு கூட்டம் விக்ரமராஜா பங்கேற்பு
 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பாளையங்கோட்டை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு தொழில் வர்த்தக சங்க தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள் இளங்கோ வரவேற்றுப் பேசினார். தமிழ் நாடு வணிகர்  சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

கூட்டத்தில் நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன் மாநகர தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ், விநாயகம், ஸ்டீபன்,பன்னீர்செல்வ ம் வைகுண்ட ராஜா இளங்கோ, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.