அல்லேரிமலை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த 11 பேர் கைது 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரிமலை நெல்லிமரத்துகொள்ளை கிராமத்தில் கள்ளச்சாராய கும்பல் கடந்த மாதம் 29ம் தேதி தாக்கியதில் 2 போலீசார் படுகாயமடைந்தனர்.

 

இதையடுத்து, கும்பலை பிடிக்க போலீஸ் படை அங்கு முகாமிட்டது. கடந்த 2ம் தேதி 2 சாராய வியாபாரிகளை கைது செய்தனர். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட போலீசார் மலையில் முகாமிட்டு, நேற்று மாலை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த 11 பேரை கைது செய்தனர்.