தொழுதூர் ஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா   

 

கடலூர் மாவட்டம்  திட்டக்குடி அடுத்த தொழுதூர் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி வளாகத்தில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் அமைப்பான  ஜே.சி.ஐ திருமுட்டம்     கிளையின் சார்பில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வும், உண்டுஉறைவிட பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழாவும் நடைபெற்றது. 

 

நிகழ்விற்கு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மண்டல இயக்குனர் குருராஜன் முன்னிலை வகித்தார். தலைமை      ஆசிரியை  ஜெயந்தி  வரவேற்று  பேசினார். 

 

சிறப்பு அழைப்பாளராக தேசிய ஒருங்கிணைப்பாளர்  ஜெயக்கண்ணன்,  அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து  தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

 

இந்நிகழ்ச்சியில்  செயலாளர் பாஸ்கர்சிங்,  மேனாள்  தலைவர் மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.