திருப்பூர் கொரோனா சித்த மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருப்பூர் மாநகர் காங்கேயம் சாலையில் சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு கடந்த மாதம் 24ம் தேதி துவங்கப்பட்டது.சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சை பெற விரும்பும் நபர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 12 நாட்களில் 74 பேர் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு 4 வயது சிறுவன் உட்பட 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோயாளிக்கு மூலிகை தேனீர், தொண்டை சுத்தம், அதிமதுர நசியம், நொச்சி தைலம், ஆவி பிடித்தல், கபசுர குடிநீர் என சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், தெரிவித்தனர்.  முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கே.ஆர்.என்.ஹோமியோபதி  மருத்துவர் கலீல் ரஹ்மான் வழங்கினார்.