இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மருத்துவ முகாம்

பல்லாவரத்தில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பாக கரோனா வைரஸ் குறித்த விழுப்புணர்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.


சென்னை அடுத்த பல்லாவரத்தில் தனியார் மருத்துவமனையில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மத்திய சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் இனைந்து கோவிட்19 விழிப்புணர்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.


பல்லாவரம் பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்களும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய முடியாதவர்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இலவச பரிசோதனை செய்துகொள்ளலாம் அவர்களுக்கு இலவசமாக மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் இங்கு வழங்கப்படும்.


ஏழை எளிய மக்களுக்கு வைரஸ் தொற்றுக்கான அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும் இந்த மருத்துவ முகாம் தொடர்ந்து 6 நாட்களுக்கு இலவசமாக நடைபெறும். இப்பகுதி மக்கள் இந்த முகாமை பயனுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும் என கூறினர்.


இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளும் மருத்துவ உபகரணங்களையும் பெற்று கொண்டு சென்றனர். இந்நிகழ்ச்சியில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை மக்களுக்கு வழங்கினர்.