இந்திராசுந்தரம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் உடல்நலம் பாதித்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவிகள்


திருப்பூர் மாவட்டம் சமூக நல துறையின் கீழ் ஒன் ஸ்டெப் சென்டர் செயல்படுகிறது. இந்த மையம் சமூக சேவாகியும் இந்திராசுந்தரம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனருமான  இந்திராசுந்தரத்தை தொடர்பு கொண்டு கேன்சர், மற்றும் எச்.ஐ.வி தொற்று பாதிப்புள்ள பெண்ணின் குடும்பத்திற்கு உதவிகள் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், 75 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் செலவுக்கு பணமும் இந்திராசுந்தரம் வழங்கினார்.