திருவள்ளுவர் திருக்கோயில் உலா திருக்குறள் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளராக வின்சென்ட் ராஜ் நியமனம்

திருவள்ளுவர் திருக்கோயில் உலா திருக்குறள் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளராக வின்சென்ட் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளுவர் திருக்கோயில் உலா திருக்குறள் இயக்கம் திருவள்ளுவரின் திருக்குறளை பரப்புவதில் முதன்மை பங்காற்றி வருகிறது. இந்த இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளராக அகவை முதிர்ந்த தமிழறிஞர் கவித்தென்றல் வின்சென்ட் ராஜ் அவர்களை நியமித்துள்ளனர். 


இவர் திருவள்ளுவரின் புகழையும் திருக்குறளின் பொருளையும் மக்களிடையே பரப்புவோம் என தெரிவித்தார். மேலும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.


அதில் மாணவர்களுக்கு பாட புத்தகத்துடன் சேர்த்து திருக்குறள் புத்தகம் ஒன்றையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.