திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் குமரன் பூங்கா புதுப்பிக்கும் பணி... வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தார்


திருப்பூர் பி.என்.ரோடு  மேட்டுப்பாளையம் குமரன் பூங்காவைமத்திய அரிமா சங்கம் சார்பில் அதன் தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமியின் சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணியை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தார்.


மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் , அரிமா சங்க மாவட்ட ஆளுநர் கருணாநிதி,  மத்திய அரிமா சங்க தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி,  மாநகராட்சி உதவி கமிஷனர்கள் வாசுக்குôர், செல்வநாயகம், உதவி பொறியாளர் சந்திரசேகர், சுகாதார அலுவலர் முருகன், முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முன்னாள் டி.எஸ்.பி. மயில்சாமி, மத்திய அரிமா சங்க செயலாளர்கள் ஜெயசேகரன், அனந்தநாராயணன், அபர்ணாநாகராஜ் பொருளாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.