ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர் நரசிங்கபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர் நரசிங்கபுரத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் சுமதி வடிவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

 

கிளைச் செயலாளர் சுருளி வரவேற்றுப் பேசினார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் ஏழை எளிய மக்களுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 

அப்போது ஊராட்சி ஒன்றிய அனைத்து கிராமங்களுக்கும் தார்சாலை வசதி சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் பதித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் ,தொடர்ந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் பற்றாக்குறையை நீக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் மரிக்குண்டு செல்வம்,விவசாய அணி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.