பஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...

லாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க...


என்னன்னு பார்த்தா..., 


பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது.


சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க..


 


அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது.


 


இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: 


 


 


பழைய பேருந்து நிலையம்


1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும்.


2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் வந்து MO Junction, ABT Road , சந்தைபேட்டை வழியாக செல்லும். 3) முதலிபாளையம் ,நாச்சிபாளையம், சிட்கோ , கொடுவாய், காசிபாளையம் ,


3) முதலிபாளையம் ,நாச்சிபாளையம், சிட்கோ , கொடுவாய், காசிபாளையம் , படியூர், காங்கேயம், சிவன்கோவில், அவிநாசிபாளயைம், கொடுவாய், கோவில்வழி, அலகுமலை, பெருந்தொழுவு, கண்டியன்கோவில், ஆகிய ஊர்களுக்குச்செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் பழைய GH எதிரில் உள்ள கல்யாணி பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தப்படும்.


யூனிவர்செல் தியேட்டர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம்: 


1) கொடுமணல், குன்னத்தூர், நம்பியூர், அவிநாசி, கருமத்தம்பட்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளையம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், கருவலூர், சேவூர், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாற்றப்பட்டு யூனிவர்செல் தியேட்டர் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிறுத்ததிற்கு வந்து செல்லும். 2) ஈரோடு, மற்றும் சேலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து


2) ஈரோடு, மற்றும் சேலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாற்றப்பட்டு யூனிவர்செல் தியேட்டர் அருகே உள்ள தற்காலிக நிறுத்ததிலிருந்து புறப்படும்.


மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தம்:


கோயம்புத்தூர், உடுமலை, பொள்ளாச்சி, ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் வந்து MO Junction, ABT Road , சந்தைபேட்டை வழியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்புறம் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்ததிலிருந்து புறப்படும். கோவில்வழி பேருந்து நிறுத்தம்.


கோவில்வழி கோவில்வழி பேருந்து நிறுத்தம்:


பழனி,தாராபுரம், திண்டுக்கல், மதுரை, பெரியகுளம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், தேனி, இராமநாதபுரம், மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோவில்வழி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும்.


புதிய பேருந்து நிலையம்:


கருர் , திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கும்பகோணம், ஆகிய ஊர்களுக்குச் சென்று வரும் பேருந்துகள் அனைத்தும் காங்கேயம் ரோட்டில் நல்லூர், காசிபாளையம் நால்ரோடு, கூலிபாளையம் நால் ரோடு, நெருப்பெரிச்சல், பூலுவப்பட்டி வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைய வேண்டும்.


பொது அறிவிப்பு


 


1) பழைய பேருந்து நிலையம் கட்டிட வேலை நடைபெறுவதால் தாராபுரம் ரோட்டிற்குச் செல்லும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. எனவே பல்லடம் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோடு, மற்றும் காங்கேயம் ரோடு செல்லும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் சந்தைப்பேட்டையிலிருந்து வெள்ளியங்காடு வழியாகவோ அல்லது வீரபாண்டி பிரிவு வழியாகவோ தாராபுரம் ரோட்டை சென்றடைய வேண்டும்.


2) பழைய பேருந்து நிலையம் கட்டிட வேலை நடைபெறுவதால் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து மாநகராட்சி வழியாக மங்களம் ரோடு செல்லும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கல்யாணி பெட்ரோல் பங்க் வழியாக பல்லடம் ரோடு சென்று TKT Show room அருகே U Trun செய்து பல்லடத்திலிருந்து திருப்பூர் நோக்கி வரும் சாலை வழியாக வந்து மேம்பாலம் ஏறி மாநகராட்சி வழியாக மங்களம் ரோடு செல்ல வேண்டும். பாலத்தின் கீழ் வாகனங்கள் எதுவும் செல்லக்ககூடாது


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 


 


Previous Post Next Post