கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக உயர் மட்ட ஆக்சிஜன் சிகிச்சை கருவி: அமைச்சர் கடம்பூர்  ராஜூ


 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழு லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன நீராவி சலவை இயந்திரம் மற்றும் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பும் வசதியையும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் 170 பேருக்கு தலா இரண்டு சிறப்பு சீருடைகளையும்  வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

 


 

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு நவீன நீராவி சலவை இயந்திரம், கொரோனா பரிசோதனை முடிவு குறுஞ்செய்தியும், தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த அவர், வேறு எந்த மாவட்டங்களில் இல்லாத வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்வதற்காக மூன்று 

ஆர்.டி. பி. சி. ஆர் பரிசோதனைகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று பாதிக்கப்பட்ட 12,000 பேருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. 

 


 

இதன் மூலமாக மாவட்டத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  இம்மருத்துவமனையில் கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 171 தீவிர சிகிச்சை அளிக்கும் வசதி உட்பட தனியாக 700 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார். சென்னை அரசு மருத்துவமனைக்கு அடுத்ததாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனை தமிழக முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார் என்று அவர் கூறினார்.

 


 

கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்படுவதாக முதல்வரை பாராட்டும் நிர்பந்தம் மோடிக்கு ஏற்பட்டது ஏன்? என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எதிர் கட்சித்தலைவர் அல்ல எதிரி கட்சி தலைவர் என்ற அவர் இதிலும் அவர் அரசியல் செய்கிறார் என்றார்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதிபாலன், மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், மருத்துவமனை துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post