திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்த்தில் தீ விபத்து... கூரை வீடு சேதம்


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தனலட்சுமி 32 இவரது கூரை வீட்டில் நேற்று  மாலை 5 மணி அளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.

 


 

அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க  முற்பட்டனர் தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கட்டில், பீரோ ,டிவி, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உட்பட சுமார் 2 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.