தமிழக முதல்வர் தூத்துக்குடிக்கு வருகை முன்னேற்பாடு பணி குறித்த அமைச்சர் ஆய்வு


 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஆய்வு மேற்கொள்ள வருகை தர உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து 

 

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேற்று  ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திக்குளம் எம்.எல்.ஏ., சின்னப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

 

கொரோனா தொற்று குறித்து தமிமுக முதல்வர் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நேரிடியாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள். 

திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். 

 

நமது மாவட்டத்திலும் தனியாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என நமது மாவட்ட மக்களின் சார்பாக நாங்கள் வைத்த கோரிக்கை ஏற்று வருகின்ற 22ந்தேதி நமது மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வருகை தர உள்ளார்கள்.

 

இந்த ஆய்வின்போது கொரோனா தொற்று குறித்தும் மேலும் நமது மாவட்டத்தில் செயல்படுத்துப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அனைத்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பாகும். 

 

தமிழக முதல்வர், நமது மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார். அத்திட்டங்களின் நிலை குறித்தும் ஆய்வு நடத்த உள்ளார். இந்த வளர்ச்சி திட்டங்கள் பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வர தேவையான அறிவுரைகளை வழங்கவுள்ளார். 

 

இந்த ஆய்வுக்கூட்டம் நமது மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

 

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினர் கோபி (எ) அழகிரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.