தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ


 

கோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழாவையொட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிக்கு சென்று கே.ராமசாமியின் உருவப்படத்துக்கு  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மரியாதை செலுத்தினார். உடன் கல்லூரி தாளாளர் கே.ஆர்அருணாச்சலம் உடனிருந்தார்.

 

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம். இதனை எதிர்கட்சி தலைவர் கூட வரவேற்றார்.

 

 நீட் பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லாமாக மாற்றுவதில் எந்த தடையும் ஏற்படாது. இதுதொடர்பான சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவு எந்தவிதமான எதிர்ப்பு இல்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஒரு டிரஸ்ட் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் இல்லத்தை நிர்வகிக்கலாம் என சட்டம் நிறைவேறியுள்ளது. 

 

கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய செப்.22-ல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறார், என்றார் அவர்.

Previous Post Next Post