ஜாலியாக உலாவிய புலி...கேமராவில் சுட்ட புகைப்படக்காரர்

காட்டுயிர் காப்பக பகுதிகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். ஆனால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.


ஆனால் கானக புகைப்படக் கலைஞர்கள் அந்த வாய்ப்பை வரமாக பெற்றவர்கள்.


நாள் கணக்கில் வாரக்கணக்கில் காத்திருந்து கானக உயிரினங்களை படமெடுத்து அவற்றின் நடவடிக்கைகளை உலகத்துக்கு சொல்வார்கள்.


அந்த வகையில் செப்டம்பர் 30-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கபினி வனப்பகுதியில், உற்சாகமாக நடை போட்ட புலி ஒன்று, கானுயிர் புகைப்படக்காரர் பிரசன்ன கவுடாவின் கேமரா கண்களில் சிக்கியது.


அடர் வனத்தில் ஒய்யார நடை நடக்கும் புலியின் கம்பீரத்தை நீங்களும் கண்டு மகிழுங்கள்..#TamilAnjal #Prasannagowda #Muruganandhan