தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலிசாருக்கும் - சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா

தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலிசாருக்கும் - சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?  என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக சிபிசிஐடி_யின் டிஎஸ்பி ராஜீ தகவல்.

 


 

தனுஸ்கோடியில் கடந்த 5ம் தேதி  தமிழக கடலோர பாதுகாப்பு குழும  போலீசாரால்  கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்ட இலங்கை கொழும்பு  குற்றத்தடுப்பு பிரிவு காவலர் பிரவின் குமார் பண்டாராவிற்கும் - தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை  நிழல் உலக தாதா அங்கொட லொக்காவுக்கும் போதை பொருள் விற்பனை செய்வதில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் ஜெ.எம். 02 நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் கடந்த வியாழக்கிழமை  அனுமதியளித்தார., 

 

 இதனையடுத்து இன்று காலை   சிபிசிஐடி_யின் டிஎஸ்பி ராஜீ தலைமையில் வந்த  போலிசார் கைது செய்யப்பட்ட சிங்கள  போலிசார் பிரவின்குமாரை நேரில் அழைத்து வந்து தனுஷ்கோடி பாலம் பகுதியில்   உள்ள மீனவர்களிடம்  விசாரணையில் ஈடுபட்டனர்., மேலும் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை முடிந்த நிலையில் நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போவதாகவும் மேலும் கைது செய்யப்பட்டவனுக்கும்,  சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜூ தெரிவித்தார்.