பம்மல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா


பம்மல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா, தாரை தப்பட்டையுடன் கொண்டாடிய நிர்வாகிகள்.

 


 

சென்னை அடுத்த பம்மல் நாகல்கேனி பெரியார் நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் பிறந்தாள்: விழா செங்கல்பட்டு மாவட்டம் எஸ்.சி அணி மாவட்ட பொதுசெயலாளர் கே..எஸ்.பழனி தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட தலைவர் பலராமன் கலந்துகொண்டார் அவரை வரவேற்க  எஸ்.சி.அணி மாவட்ட பொதுச்செயலாளர் பழனி வழி நெடுங்கிலும் பிரம்மாண்ட கழககொடியேற்றி, தாரை, தப்பட்டையுடன், பேண்டு வாத்தியங்கள் முழங்க புலிவேடமிட்டவர்கள் நடனமாடி அவர்களுடன் பஜக நிர்வாகிகள் குட்தாட்டம் போட்டு மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து பஜக கழக கொடியேற்றியும், பஜக வில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பின்னர் மாற்று திறனாளிகளுக்கு முன்று சக்கர சைக்கிள் வழங்கியும், ஏழை, எளிய மக்களுக்கு நகதிட்ட உதவிகளான புடவை வழங்கப்பட்டு சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

இதில் எஸ்.சி.அணி மாநில செயலாளர் சம்பத்ராஜ், எஸ்.சி.அணி மாவட்ட தலைவர் பார்த்திபன், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, பம்மல் மண்டல தலைவர் கோகுல், தாமரை பாலாஜி மற்றும் பஜக நிர்வாகிகள் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.