அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி நொச்சிகுளத்தை சேர்ந்த அமமுக  நிர்வாகிகள் 20 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் வழக்கறிஞர் அன்பு ஏற்பாட்டில்  திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது மேலப்பாளையம் பகுதி எம்ஜிஆர்  இளைஞரணி செயலாளர் சண்முககுமார் உடனிருந்தார்.