4 கோடி மதிப்பிலான தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர் ராஜாகிருஷ்ணன் பூமி பூஜையிட்டு  பணிகளை துவக்கி வைத்தார்
 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டையம்பாளையம், பெருமுகை,  புஞ்சைதுறையம் பாளையம் மற்றும் புளியம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தார்சாலை மேம்படுத்துதல்,  தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்குதல்,  கான்கிரீட் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு 4 கோடி மதிப்பிலான தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர் ராஜாகிருஷ்ணன் பூமி பூஜையிட்டு  பணிகளை துவக்கி வைத்தார்.

 

முன்னதாக கள்ளிப்பட்டியில்  நடைபெற்ற விழாவில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் கலையரங்கதிற்கு  கட்டுமான பணியை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கன்வாடிகளுக்கு சமையல் பாத்திரங்களை வழங்கி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.பின்னர்  செய்தியாளர்களிடம்,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களான தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தமிழக சுற்று சூழல் துறை அமைச்சர்  கே.சி.கருப்பணன் ஆகிய இருவரும் அந்தியூர்  தொகுதிக்கு தேவையான திட்டங்களை முன் நின்று செயல்படுத்தி வருவதாகவும்,  தொகுதிக்கு எப்போது அழைத்தாலும் உடனே வந்து மக்களை சந்திப்பதாகவும் கூறி  பெருமிதம் அடைந்தார்.

 

பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நவமணி கந்தசாமி,கவுன்சிலர் ராதா ஹரிபாஸ்கர்,இளைஞர் பாசறை செயலாளர் ஹரிபாஸ்கர்,விஏஓ ஜெயந்தன், துறையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்சேகர்,முன்னாள் கவுன்சிலர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அலமேலு ஜெயராமன்,தங்கராசு மற்றும் காகுத் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர் கார்த்திகேயன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.