குடியாத்தம் நகரில் கால்வாய்களை தூர்வார வேண்டும்இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் தலித் குமார் கோரிக்கை


 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் குடியாத்தம் நகரில் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்டத் தலைவர் இரா.சி.தலித் குமார் கேட்டுகொண்டார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:

 

வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், குடியாத்தம் நகரில் கழிவுநீர் கால்வாய்கள், நீர்வரத்து கால்வாய்களை நகராட்சி நிர்வாகமும், போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். மழை அதிக அளவில் பொழியும் என்று எதிர்பார்க்கும் நிலையில் சீரமைப்பு நடவடிக்கை உடனே தேவை. சில நிமிடங்கள் மழை பெய்தாலே குடியாத்தம் புதிய, பழைய பஸ் நிலையங்களில் குறைந்தது ஓரடிதேங்குகிறது. இதே நிலைதான் ஆர்.எஸ்.ரோடு, பலமநேர் ரோடு, தாழையாத்தம் பஜார், தரணம்பேட்டை பஜார், மேல்பட்டி ரோடு, பேர்ணாம்பட்டு ரோடு போன்றவற்றிலும் மழைநீர் செல்ல வழியில்லை. கழிவுநீரோடு மழைநீர் கலந்து தொற்றுநோய் பரவுகிறது. கொரோனா காலம் என்பதால் இந்த ஆண்டு மோசமான நிலை உருவாக வாய்ப்பு உண்டு. ஆபத்து நிகழும் முன் விழிப்பது அவசியம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.