மானிய விலையில் இரு சக்கர வாகனம்: கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாண்புமிகு. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய திட்டமான உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானிய விலையில் இரண்டு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சார்ந்த தகுதி வாய்ந்த 17 மகளிருக்கு காசோலைகள் மற்றும் வடுக பாளையம் புதூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு வேளாண் கருவிகளுடன் கூடிய டிராக்டர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்   கரைப்புதூர் ஏ.நடராஜன்   வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ரெ.கோமகன், மற்றும் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, பானுப்பிரியா, ஒன்றியக்குழு துணைத் தலைவர் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர், மற்றும் ஏ.சித்துராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, நடராஜன், ராமசாமி, மற்றும் கழக நிர்வாகிகள், பயனாளிகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்துகொண்டனர்.