தேசிய நெடுஞ்சாலையில் பழுதான வாகனத்தை சரி செய்த போலீஸ்: பொதுமக்கள் பாராட்டு

விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பழுதாகி நின்ற கனரக வாகனம் போக்குவரத்து பாதிப்பு வாகனத்தை பழுது பார்த்த காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு.மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு சிமெண்ட் மணல் கம்பிகள் என இறக்குவதற்கு தினமும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் மருத்துவக் கல்லூரிக்கு சரக்குகளை ஏற்றி வந்த லாரி சரக்குகளை இறக்கிவிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகம் சர்வீஸ் சாலையில் இருந்து மெயின் ரோட்டிற்கு திரும்பும்போது ஹைட்ராலிக் எனப்படும் ஏர் செல்லும் வயர் அறுந்து வாகனம் பழுதாகி நடுரோட்டில் நின்றது இதனால் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 


பின்னர் அந்த இடத்தில் போக்குவரத்து பணிக்காக ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் மற்றும் சூலக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராம்குமாரும் உடனடியாக வாகனத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர் 20 நிமிடங்கள் போராடி லாரியின் பழுதை நீக்கி லாரி செல்வதற்கு உதவி செய்தனர் இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் காவல்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.