பழனியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


 

பழனி மயில் ரவுண்டானா அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தில் இளம்பெண் மர்ம நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு எரித்துக் கொன்ற சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசும் உ.பி.அரசும் எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இறந்த பெண்மணியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற கட்சி தலைவர்களை காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகவும் உ.பி. அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து கண்டன குரல்கள் எழும்பி வருகின்றனர்.

 

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெண்கள் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உ.பி. அரசை அறிவிக்க வேண்டும் இந்நிகழ்வுக்கு பொறுப்பேற்று உ.பி. முதல்வர் யோகி பதவி விலக வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மத்திய அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக சட்டமன்ற தொகுதி செயலாளர் துரை.முத்தரசு முன்னிலையாக

மாவட்ட செய்தி தொடர்பாளர்  பொதினி வளவன் சிறப்பு அழைப்பாளர்களாக மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் இனியன் ஒன்றிய செயலாளர் பூமிநாதன் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த குமாரசாமி,ஜெயக்குமார்

வாய்க்கால்சாமி, மட்டும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு கையில் கட்சி கொடிகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..