கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்கள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ1.75 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் 





 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் ஒன்றியம் அக்கரை கொடிவேரி ஊராட்சியில் ஆதிதிராவிடர் வசிக்கும் 

குக்கிராமங்கள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ1.75 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் 

மற்றும் பெரிய கொடிவேரி பேரூராட்சியில்  சந்தை மேம்பாடு செய்தல் பணிக்கு ரூ1.67 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

 


 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கூறியதாவது,

 

அதிமுக வில் 11பேர் கொண்ட குழுவில் இடம் பெறாதது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என அமைச்சர் கூறினார்.கட்டாய கல்வித்திட்டத்தில் மாணவர்களை சேர்க்க கால அவகாசம் செய்யப்பட்டுள்ளது எனவும்,அதற்கு தேதிகள் பட்டியலிடப்பட்டுள்ளது எனவும்,2013ம் ஆண்டு முதல் இன்று வரை 943கோடி கட்டாய கல்வித்திட்டத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது எனவும்,எல்கேஜி,யூகேஜி வகுப்புகளுக்கு மத்திய அரசு நிதிகள் வழங்கப்படாமல் இருந்ததை தொடர்ந்து,புதிய கல்வி கொள்கை திட்டத்தில் நிதிகள் வழங்க பரிந்துரை செய்தும் இதுவரை வழங்க படவில்லை என்றாலும் மக்களின் நலன்,குழந்தைகளின் நலன் கருதி இன்று வரை தமிழக அரசால்  திட்டத்தை நிறைவாக செய்து வருகிறது எனவும்,ஜல் ஜீவன் திட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் சட்ட முறைப்படி, சரியான முறையில் நிதிகள் செலவு செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா,கோட்டாட்சியர் ஜெயராமன்,ஆவின் தலைவர் காளியப்பன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி பெரிய கொடிவேரி பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ்.,ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.மனோகரன், அக்கரை கொடிவேரி ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார்.ஆசிரியர் வேலுச்சாமி,யூனியன் சேர்மன் விஜயலட்சுமி,திருவேங்கடம், அஸ்விகா ஸ்டுடியோ ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

 




Previous Post Next Post