திருப்பூர் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் சிறப்பு முகாம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம்
ஊராட்சி ஒன்றியம் குடிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறும் சிறப்பு முகாமில், கலெக்டர் க.விஜயகார்த்திகேயன்முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.


மேலும் அவர் பேசுகையில்:-


மறைந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக
மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார்கள்.


மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அம்மா அவர்களின் மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், நமது மாவட்டத்தில்
உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம
ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக குக்கிராமங்களில் உள்ள பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், இன்றைய தினம் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மற்றும் கிராம ஊராட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மற்றும் பொதுமக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் விரைவாக நிறைவேற்றிட வேண்டுமெனவும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பொதுமக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு சார்பில் அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்றுக்கொண்டு பயன்பெற வேண்டுமென கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.


இம்முகாமில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விலையில்லா
வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் தொடர்பான மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், இன்றைய முகாமில், 9 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 மதிப்பில்
ரூ.1,08,000 மதிப்பில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, கோட்டமங்கலம் ஊராட்சி மற்றும் பொன்னேரி ஊராட்சி ஆகிய ஊராட்சி
பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அமைச்சர் பெற்றுக் கொண்டார்.


இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், திருப்பூர் மாவட்ட ஆவின்
சங்க தலைவர் கே.மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாண்டியன்,
உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) ரெங்கராஜன், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுகந்தி, துணைத் தலைவர் புஷ்பராஜ், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முரளி, இணை இயக்குநர் (வேளாண்மை) மனோகன், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்
மரகதம், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் ஜெய்சிங்சிவகுமார், குடிமங்கலம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்டன், சிவகுருநாதன், ஊராட்சி
மன்றத்தலைவர்கள் உமாதேவி (குடிமங்கலம்), ஸ்ரீவள்ளி (கோட்டமங்கலம்),
அனுசுயாதேவி (பொன்னேரி), கூட்டுறவு சங்க தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு
பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Previous Post Next Post