ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2000 தீபாவளி பரிசு... எடப்பாடியாரின் பலே திட்டம்

கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த தமிழக மக்களுக்கு உதவ தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.


இதற்காக தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக குடும்பங்களுக்கு இந்த தொகையை தருவதற்காக, குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்க அனுமதியும், ஜி.எஸ்.டி வரியிலிருந்த மாநில பங்கிலிருந்து 3000 கோடியை இதற்காக வழங்கும் படியும் மத்திய அரசிடம் முதலமைச்சர் இ.பி.எஸ் கோரியிருந்தார்.


 இதையடுத்து சமீபத்தில் சென்னை லந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நிதித் துறை செயலர் கிருஷ்ணன், வணிக வரித்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் சந்தித்து அரசின் கோரிக்கையை வலியுறுத் தினர்.


 இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 3000 கோடியை விடுவிப்பதாகவும், தமிழக மக்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்கவும் மத்திய அரவு அனுமதி அளித்துள்ளது.


 இதற்கான கடிதத்தை மத்திய நிதி அமைச்சகம், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.


 இதையடுத்து, வருகிற நவம்பர் மாதம் தீபாவளியையொட்டி தமிழகத்தில் குடும்பம் ஒன்றுக்கு தலா 2000 ரூபாயை தமிழக அரசு வழங்கவுள்ளது என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் தமிழக மக்களுக்கு அரசின் இந்த திட்டம் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.


ஏற்கனவே பொங்கல் பரிசு ரூ.1000 வழஙகிய அதிமுக அரசு இப்போது ரூ.2000 வழங்கும் என்ற தகவல் பொதுமக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது


 


 


Previous Post Next Post