குடியாத்தத்தில் கண்தான ஆர்வலர் கோபிநாத்தின் முயற்சியில் 211-ஆவது கண் தானம்

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வயது முதிர்வால் மறைந்த தனது தாயின் கண்களை வேலூர் மாவட்ட எஸ்.பி.யின் நேர்முக உதவியாளர் என்.வெங்கடேசன் வழங்கினார். இது குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவரும் கண்தானப் பிரிவின் மாவட்டத் தலைவருமான எம்.கோபிநாத்தின் முயற்சியில்,  9.10.2020-அன்று பெறப்பட்ட 211ஆவது கண்தானமாகும்.

 

வேலூர் மாநகராட்சி விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த திருமதி. பேபி அம்மாள் செட்டியார்  (வயது 82), 9.10.2020அன்று இயற்கை எய்தினார்.

இதையடுத்து, அவரது மகனும் வேலூர் மாவட்ட எஸ்.பி.யின் நேர்முக உதவியாளருமான என்.வெங்கடேசனின்   ஒப்புதலுடன், பேபி  அம்மாளின் கண்கள் தானமாகப் பெற்று  காஞ்சிபுரம்   அகர்வால் கண்மருத்துவமனைக்கு  கண் தானம் செய்யப்பட்டது.

 

கண் தானம் பெற  உதவியாக ரோட்டரி சங்க பிரமுகர் புரட்சி, திருப்பத்தூரை சேர்ந்த டாக்டர் வினோதினி மற்றும் பலர் உதவிபுரிந்தனர். இதுவரை கோபிநாத் தனது முயற்சியில், 211பேரின் கண்களை தானமாக பெற்று வேலூர் சி.எம்.சி., காஞ்சிபுரம் அகர்வால், மற்றும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கண்களை தானமாக பெற்று அனுப்பியுள்ளார்.

 

இதுதவிர, மூளைச்சாவு அடைந்த 3 பேரின் உடல் உறுப்புகளையும், இறந்த .51 பேரின் உடல்களை தானமாகப் பெற்று சி.எம்.சி., குப்பம் பி.இ.எஸ்., சென்னை ராஜூவ் காந்தி மற்றும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளார். மேலும்,  ஆதரவற்ற ..14 பேரின் உடல்களை தானே முன்னின்று அடக்கம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

உதவிகளுக்காகத் தன்னிடம்  94433 -27912 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால்  நேரத்தில்  என்னை அழைத்தாலும் அதற்காக தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்வேன் என்று கோபிநாத் தெரிவித்துள்ளார்.