வேப்பூர்அருகே கள்ளச்சாரய வியாபாரி கைது,  120 லிட்டர் சாரயம் பறிமுதல்


 

விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகிலுள்ள சித்தேரி பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து 120 லிட்டர் சாரயத்தை பறிமுதல் செய்தனர்

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்காவை சேர்ந்த சித்தேரி ஊராட்சி ஏரி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதாவிற்கு தகவல் கிடைத்தது

 

அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் கவிதா,  சிறுபாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலிசார் சித்தேரி ஏரிக்கரை பகுதிக்கு சென்றனர் அங்கு கள்ளாச்சாரயம் விற்றுக்கொண்டிருந்த. அதே கிராமத்தை சேர்ந்த ராயபிள்ளை மகன் மருதமுத்து (வயது 27) என்ற வாலிபரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.