கர்நாடக புகைப்படக்காரர் கேமராவில் சிக்கிய கபினிக் காட்டுக் கருஞ்சிறுத்தை


காடுகளில் வசிக்கும் கானக உயிரினங்களை காண்பது அரிதான விஷயம். காட்டுப்புலி, சிறுத்தை போன்ற அரிதான உயிரினங்களை காண்பதற்காக வன ஆர்வலர்களும், வனவியல் புகைப்படக்காரர்களும் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என கணக்கில்லாமல் காத்திருப்பது இன்றளவும் நடந்து வரும் விஷயம். 


அப்படி காத்திருந்தாலும், காட்டுப்புலி, சிறுத்தை என காண்பதையும் விட அரிதான விஷயம் கருஞ்சிறுத்தை ஒன்றை நேருக்கு நேர் காண்பது...


இப்படி ஒரு அரிதான கருஞ்சிறுத்தையை, கர்நாடக மாநிலத்தின் கபினி வனப்பகுதியில்,  நேருக்கு நேர் நின்று படமெடுத்திருக்கிறார் கர்நாடக வனவியல் புகைப்படக்காரரான பிரசன்ன கவுடா..


பச்சைக்காட்டின் பின்னணியில், கருந்தோல் மின்ன, பார்வையை நெருப்பாக்கி, பாய்வதற்காக பதுங்கி நடந்து வருகிறது இந்த கருஞ்சிறுத்தை..


கருஞ்சிறுத்தையின் தீர்க்கமான பார்வையை  நீங்களும் பாருங்களேன்..